நடிகர் ரவி மோகனும், அவரது மனைவி ஆர்த்தியும் விவாகரத்து வழக்கின் காரணமாக தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரவி மோகன் தனது வாழ்க்கையில் நடந்த சில கஷ்டங்களை பகிர்ந்து கொண்டார்
தற்போது யோகி பாபுவை வைத்து ‘அன் ஆர்டினரி மேன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இது இயக்குநராக ரவி மோகனின் முதல் முயற்சி ஆகும்.நேற்று நண்பர்கள் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவு தற்போது வைரலாகியுள்ளது. “என் வாழ்க்கையில் உண்மையாக துணையாக நின்றவர்களுக்கு நன்றி. சிலர் தொடர்ந்து துரதிர்ஷ்டவசமான முறையில் செயல்பட்டு வருகிறார்கள். நான் உயிரோடு இருக்கும் வரை, நாங்கள் நால்வரும் மீண்டும் ஒரே அறையில் ஒன்றாக இருக்க மாட்டோம். உங்கள் நண்பர்களை கவனமாகத் தேர்ந்தெடுக்குங்கள்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
அதேபோல், தனது பெற்றோர் மற்றும் அண்ணனுடன் எடுத்த புகைப்படங்களையும், உற்சாகமாக நடனமாடும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. மேலும் அவர் வெளியிட்டுள்ள பதிவில் “நான் இயக்கும் படத்தின் சில காட்சிகளையும் இசையையும் என் குடும்பத்தினருக்குக் காட்டினேன். குறிப்பாக என் அப்பா கைதட்டிய அந்த தருணம், ஒவ்வொரு குழந்தைக்கும் பெற்றோரிடமிருந்து கிடைக்க வேண்டிய ஆசீர்வாதம்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
