1973-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். இயக்கி, கதாநாயகனாக நடித்த திரைப்படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட இப்படத்தில் தாய்லாந்து நடிகை மெட்டா ரூங்ராட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தின் நான்காவது கதாநாயகியாக இடம்பெற்ற அவர், எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்த ‘பச்சைக்கிளி… முத்துச்சரம்’ பாடல் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார். இந்தப் பாடலால் ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்த மெட்டா ரூங்ராட், உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார்.
Add a Comment
