ரஜினிகாந்த் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினி மருத்துவராக நடிக்கிறார். ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் சிம்ரன், ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.பல்வேறு கட்டங்களாகப் படப்பிடிப்பு நடைபெற்று வரும் இப்படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
மேலும் நடிகை நயன்தாரா இப்படத்தில் இணைந்திருப்பதை அவரது கதாபாத்திர அறிமுக கிளிம்ப்ஸ் வீடியோ மூலம் படக்குழு உறுதிப்படுத்தியிருந்தது. தற்போது அந்த வரிசையில் நடிகை ஸ்ரீலீலாவும் தர்மன் படத்தில் இணைந்துள்ளார். இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள படக்குழு, ஸ்ரீலீலாவின் கதாபாத்திர அறிமுக வீடியோவையும் வெளியிட்டுள்ளது.
படத்தில் ஸ்ரீலீலாவின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த், நயன்தாரா, ஸ்ரீலீலா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ளதால் ‘தர்மன்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
