ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘ஹார்ட் பீட்’ இணையத் தொடரின் மூன்றாவது சீசன் இன்று முதல் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது. தீபக் சுந்தர்ராஜன் இயக்கும் இந்தத் தொடரை டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரித்து வருகிறது.
முதல் இரண்டு சீசன்களின் வெற்றியைத் தொடர்ந்து வெளியாகியுள்ள புதிய சீசனில், வாரம் தோறும் வியாழக்கிழமைகளில் நான்கு எபிசோடுகள் வெளியிடப்படவுள்ளன.
அனுமோள், கார்த்திக் குமார், தீபா பாலு, யோகலக்ஷ்மி, மோகன் ராம், சாருகேஷ், அமித் பார்கவ், அஸ்வதி, சபரிஷ் உள்ளிட்ட பலர் மீண்டும் நடித்துள்ளனர். அதே நேரத்தில், நவீன் வேடத்தில் நடித்த ஆர்ஜி ராம், அனிதா வேடத்தில் நடித்த பாடினி குமார், தேஜு வேடத்தில் நடித்த யோகலட்சுமி மற்றும் குணா வேடத்தில் நடித்த சர்வா இந்த சீசனில் இடம்பெறமாட்டார்கள் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது.இன்று வெளியான மூன்றாவது சீசன், முந்தைய கதையிலிருந்து மாறுபட்ட புதிய திருப்பங்களுடனும், புதிதாக அறிமுகமான கதாபாத்திரங்களுடனும் தொடங்கியுள்ளது.
