சூரியின் ‘மண்டாடி’ பாடல் ரீல்ஸில் வைரல்!

நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் “மண்டாடி”. இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். நாகை பகுதி மீனவர்களின் வாழ்வியலையும், அங்கு நடைபெறும் படகுப் போட்டிகளையும் மையமாகக் கொண்டு படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் வெளியான “மண்டாடி மண்டாடி” பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, பாடலில் சூரி ஆடிய நடனம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதன் தாக்கமாக பலரும் அதே பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வெளியிட்டு வருகின்றனர். இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரீல்ஸ் வெளியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading