தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ் மற்றும் இளைஞர்களின் ஆல்டைம் ஃபேவரைட் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நமீதா. திருமணத்திற்குப் பிறகு குடும்பம், குழந்தைகள் மற்றும் அரசியல் பணிகள் என பிஸியாக இருந்து வந்த அவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது புதிய போட்டோஷூட் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
நமீதாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் விகடன் சினிமா மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் வெளியாகி சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகின்றன. இந்த புதிய போட்டோஷூட்டில் முற்றிலும் மாறுபட்ட ஸ்டைலான உடைகளில் தோன்றியுள்ள நமீதாவின் புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன.
குறிப்பாக, கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தனது உடல் எடையை கணிசமாக குறைத்துள்ள நமீதாவின் புதிய ஃபிட்னஸ் தோற்றம் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. கவர்ச்சியும் கம்பீரமும் கலந்த அவரது புதிய தோற்றத்திற்கு ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு நமீதாவின் இந்த புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருவதுடன், அவரது உடல் எடை குறைப்பு மற்றும் ஃபிட்னஸ் மாற்றமும் ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
