ஜூலை 18-ல் வெளியாகிறதா ‘ராமாயணா’ டிரைலர்?… 4,000 கோடி பட்ஜெட் படத்திற்கு பிரம்மாண்ட விழா!

இந்திய சினிமாவின் மிகப்பெரிய படைப்புகளில் ஒன்றாக உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படத்தின் டிரைலர் வருகிற ஜூலை 18-ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் டிரைலர் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த காவியத் திரைப்படத்தின் முக்கியத்துவத்தை உலகளவில் வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குநர் நிதேஷ் திவாரி, தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா ஆகியோருடன் படத்தின் முக்கிய நடிகர்களான ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், சன்னி தியோல், ரவி துபே, ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் மற்றும் குணால் கபூர் உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் முதல் பாகம் 2026-ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இணைந்து இசையமைப்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் ரூ.4,000 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தப் படம், இந்திய சினிமா வரலாற்றிலேயே மிக அதிக செலவில் தயாராகும் திரைப்படமாக கருதப்படுகிறது. இந்திய திரையரங்கு வெளியீட்டு உரிமையை கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் ரூ.250 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா திரையிட்ட 30 நிமிட சிறப்பு காட்சிகளை பார்த்த பிறகே இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும், உலகளாவிய விநியோகத்தை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading