‘கர’ படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷ், தற்போது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55-வது திரைப்படமான ‘ஓம்’ படத்தில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தைத் தொடர்ந்து, தமிழரசன் பச்சமுத்து இயக்கும் படம், மாரி செல்வராஜ் இயக்கும் படம் மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வட சென்னை’ உள்ளிட்ட பல படங்கள் வரிசையாக காத்திருக்கின்றன.
இந்த நிலையில், நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கங்களில் நேற்று (ஜூலை 7) “10.7.26” என்ற தேதியுடன் ‘DxV’ என்ற எழுத்துகள் இடம்பெற்ற போஸ்டரை ‘பணிந்தவரை விட்டு வைப்பான்பகைத்தவரை நட்டு வைப்பான்’ என்ற கேப்ஷனுடன்வெளியிட்டு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த போஸ்டர் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு யூகங்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி, ‘DxV’ என்பது தனுஷ் – வெங்கட் பிரபு கூட்டணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இருக்கலாம் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். அதேசமயம், இது ‘ஓம்’ படத்தின் அப்டேட்டாகவோ, மாரி செல்வராஜ் இயக்கும் புதிய பட அறிவிப்பாகவோ, டிவிவி நிறுவனத்தின் தயாரிப்பாகவோ அல்லது தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியுடன் தனுஷ் இணையும் பட அறிவிப்பாகவோ இருக்கலாம் என்றும் ரசிகர்கள் யூகித்து வருகின்றனர். ஜூலை 10-ஆம் தேதி வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பே இந்த மர்மத்திற்கு விடை அளிக்கும்.
