சுதன் சுந்தரத்தின் பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் ஹெச். வினோத்தின் அஸ்பயர் உபுண்டு பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அல்மோஸ்ட் நல்லவன்’. பிக் பாஸ் தமிழ் சீசன் 5 வெற்றியாளரான ராஜு ஜெயமோகன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகுவதுடன், கதாநாயகனாகவும் நடிக்கிறார். துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்க, சத்யராஜ் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.
படம் குறித்து பேசிய ராஜு ஜெயமோகன், ஒவ்வொரு மனிதரிடமும் நன்மையும் குறைகளும் கலந்திருக்கும் என்ற கருத்தை பிரதிபலிக்கும் வகையில் ‘அல்மோஸ்ட் நல்லவன்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இன்றைய டிஜிட்டல் உலகில் மக்கள் தங்களின் உண்மையான அடையாளத்துடன், இணையத்தில் உருவாக்கிக் கொள்ளும் மற்றொரு பிம்பத்துடனும் வாழ்கிறார்கள் என்றும், அந்த டிஜிட்டல் அடையாளமே உண்மையானது என நம்பும் ஒருவரை மையமாகக் கொண்ட கதையாக படம் உருவாவதாக கூறினார்.
மேலும், சத்யராஜ், துஷாரா விஜயன், இமான் அண்ணாச்சி, தாமரைச் செல்வி, யாழினி, பிரிதம் சக்ரவர்த்தி உள்ளிட்டோருடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி இருப்பதாக தெரிவித்த அவர், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் தனித்துவமான டார்க் காமெடி திரைப்படமாக இந்தப் படம் உருவாகி வருவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
—
