‘ஜி.டி.என்’ டிரெய்லர் வெளியீடு… ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையை திரையில் கொண்டுவரும் மாதவன்!

இந்தியாவின் ‘எடிசன்’ என போற்றப்படும் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ஜி.டி.என்’ திரைப்படத்தில் மாதவன் ஜி.டி.நாயுடுவாக நடித்துள்ளார்.

கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்தை வர்கீஸ் மூலன், விஜய் மூலன், சரிதா மாதவன் மற்றும் மாதவன் இணைந்து தயாரித்துள்ளனர்.

படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ஜி.டி.நாயுடுவின் குடும்பத்தினரும், படக்குழுவினரும் கலந்து கொண்டனர். விழாவிற்கு முன் ஜி.டி.நாயுடு பயன்படுத்திய முதல் பேருந்து மற்றும் பழமையான கார்கள் அணிவகுத்து வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அறிவியல் சாதனைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. விரைவில் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாக உள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading