தமிழ் மற்றும் இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, தற்போது தமிழ், இந்தி திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களில் பிஸியாக நடித்து வருகிறார். சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘புருஷன்’ திரைப்படத்தில் நடித்துவரும் அவர், இந்தியில் பல புதிய படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் மற்றும் ஓடிடி தளங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் தமன்னா, ‘ஜீ கர்தா’, ‘ஆக்ரி சச்’ உள்ளிட்ட வெப் தொடர்களின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார். மும்பையில் உள்ள தனது ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் அவர், அங்குள்ள உட்புற வடிவமைப்புகளை தனது தந்தையே வடிவமைத்ததாக முன்பே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மும்பையின் மழைக்காலத்தை ரசிக்கும் வீடியோ ஒன்றை தமன்னா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பால்கனியில் நின்று மழையை ரசிப்பது, மழையில் நனைந்து மகிழ்வது, குளிரில் நடுங்கியபடி சிரித்துக் கொண்டிருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ள அந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.அந்த பதிவில், “எனக்கு இன்னும் குளிராக இருக்கிறது” என்ற தலைப்பையும் தமன்னா குறிப்பிட்டுள்ளார். எளிமையான தோற்றத்தில் மழையை மகிழ்ச்சியுடன் ரசிக்கும் அவரது வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
