இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் சிலம்பரசன் கதாநாயகனாக நடித்து வருகிறார். பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். வடசென்னை பின்னணியில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன
இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு பேசுகையில், இயக்குநர் வெற்றிமாறனிடம் சமீபத்தில் பேசியதாகவும், படத்தின் அப்டேட்களை இயக்குநரே வெளியிட வேண்டும். அதேநேரம், ‘அரசன்’ திரைப்படம் வசூலில் இதுவரை இல்லாத அளவுக்கு சினிமா உலகையே உலுக்கும் படமாக அமையும் என்றும், ஒவ்வொரு ஃபிரேமிலும் மிகப்பெரிய உழைப்பு இடம்பெற்றிருப்பதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.
மேலும், ‘அரசன்’ திரைப்படம் ஈடு இணையற்ற வெற்றியைப் பெற்று தமிழ் சினிமாவில் புதிய வசூல் சாதனையை படைக்கும் என்ற முழு நம்பிக்கை இருப்பதாகவும் கலைப்புலி எஸ். தாணு தெரிவித்துள்ளார். இதனால், அடுத்தகட்ட அப்டேட்கள், டீசர் மற்றும் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
