தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவரான அனுபமா பரமேஸ்வரன், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழித் திரைப்படங்களில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். சமீபத்தில் துருவ் விக்ரமுடன் நடித்த ‘பைசன்’ திரைப்படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. தற்போது மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வரும் அவர், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சமூக வலைதளங்களில் நடைபெறும் தனிநபர் தாக்குதல்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அப்போது பேசிய அனுபமா பரமேஸ்வரன், “திரைப் பிரபலங்களையும் விமர்சனங்களையும் பிரிக்க முடியாது. ஆனால் திட்டமிட்டு ஒருவரை குறிவைத்து நடத்தப்படும் தனிநபர் தாக்குதல்களை யாராலும் தடுக்க முடியாத நிலை உள்ளது. குறிப்பாக, போலி ஆபாச வீடியோக்களை உருவாக்கி பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும், “போலி ஆபாச வீடியோக்களை திட்டமிட்டு வெளியிடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டால்தான் இந்தப் போக்கு நிற்கும். இல்லையெனில் இத்தகைய குற்றங்கள் தொடர்ந்து நடைபெறும். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு கடுமையான தண்டனைகளே நிரந்தர தீர்வாக அமையும்” என்று அவர் வலியுறுத்தினார். அனுபமா பரமேஸ்வரனின் இந்தக் கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.
—
