ஆக்‌ஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘ரேனிகுண்டா 2’ …‌ வெளியான டீஸர்!

இயக்குநர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் 2009-ஆம் ஆண்டு வெளியான ‘ரேனிகுண்டா’ திரைப்படம், அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிக்கும் ஐந்து சிறுவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. ஜானி, சஞ்சனா சிங், தீப்பெட்டி கணேசன், சனுஷா உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியானது. கணேஷ் ராகவேந்திரா இசையமைத்திருந்தார்.

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘ரேனிகுண்டா 2’ உருவாகியுள்ளது. இயக்குநர் பன்னீர்செல்வம் இயக்கியுள்ள இப்படத்திற்கு மனு ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். பாடல்களை யுகபாரதி மற்றும் விவேகா எழுதியுள்ளனர். மேலும், இளம் நடிகை தீப்ஷிகா இந்தப் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

இந்த நிலையில், ‘ரேனிகுண்டா 2’ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. விரைவில் படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading