அன்னா பென் நடிக்கும் புதிய மிஸ்ட்ரி திரில்லர் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

மலையாள சினிமாவில் கும்பளங்கி நைட்ஸ், ஹெலன் உள்ளிட்ட படங்கள் மூலம் கவனம் பெற்ற நடிகை அன்னா பென், தற்போது புதிய மிஸ்ட்ரி திரில்லர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழில் கொட்டுக்காளி மற்றும் சமீபத்தில் வெளியான கான்சிட்டி படங்களில் நடித்திருந்த அவர், மீண்டும் வித்தியாசமான கதைக்களத்தில் நடிக்க உள்ளார்.

இந்தப் படத்தில் பிரேமலு திரைப்படம் மூலம் பிரபலமான நடிகர் சங்கீத் பிரதாப் கதாநாயகனாக நடிக்கிறார். பஹத் பாசில் நடித்த அதிரன் மற்றும் அமலா பால் நடித்த டீச்சர் ஆகிய படங்களை இயக்கிய விவேக் இந்தப் படத்தை இயக்குகிறார். கொச்சியில் சமீபத்தில் நடைபெற்ற பூஜையுடன் படம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஜூலை மாதத்தின் இரண்டாம் பாதியில் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading