‘ஜனநாயகன்’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழா? வெளியான புது தகவல்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம், ரிவைசிங் கமிட்டியின் பரிசீலனைக்கு பிறகும் இன்னும் சென்சார் சான்றிதழ் பெறாமல் இருந்த நிலையில், தற்போது அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், மிக விரைவில் திரைப்படத்திற்கு அதிகாரப்பூர்வமாக சென்சார் சான்றிதழ் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதனிடையே, படத்திற்கு ‘ஏ’ (A) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. சென்சார் தொடர்பான அனைத்து நடைமுறைகளும் நிறைவடைந்ததும், தயாரிப்பு நிறுவனம் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கத் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், இந்த மாத இறுதிக்குள் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிர அரசியலில் முழுமையாக ஈடுபட முடிவு செய்ததன் காரணமாக, ‘ஜனநாயகன்’ தான் தனது திரையுலகின் கடைசி திரைப்படம் என்று நடிகர் விஜய் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதனால், அவரது இறுதிப்படத்தை திரையரங்குகளில் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading