பிகினி உடை அணிவதில் என்ன தவறு?விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த மாளவிகா மோகனன்!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான மாளவிகா மோகனன், மாலத்தீவில் எடுத்த பிகினி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததைத் தொடர்ந்து எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார். தற்போது விஜய் சேதுபதியுடன் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கும் தி பாக்கெட் நாவல் திரைப்படத்தில் நடித்துவரும் அவர், படப்பிடிப்பு இடைவேளையில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றிருந்தார்.

அவர் வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்த நிலையில், சிலர் உடைத் தேர்வை விமர்சித்தனர். இதற்கு பதிலளித்த மாளவிகா மோகனன், “பிகினி அணிவதில் எந்தத் தவறும் இல்லை. வெளிநாடுகளில் நீச்சல் உடை அணிவது மிகவும் இயல்பான ஒன்று. அதே நேரத்தில் நமது பண்பாடு மற்றும் கலாசாரத்தை மதிக்கவும் எங்களுக்கு தெரியும். எல்லை மீறாத கவர்ச்சி எது என்பது நடிகைகளுக்குத் தெரியும். எனவே தேவையற்ற விமர்சனங்களை தவிர்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading