மிகப்பெரிய பொருட்செலவில் உருவான ‘நாகபந்தம்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு!

இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக ‘நாகபந்தம்’ திரைப்படம் பார்க்கப்படுகிறது. மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் இந்த மர்மத் திரில்லர் திரைப்படத்தில் விராட் கர்ணா கதாநாயகனாக நடித்துள்ளார். நடிகை நபா நடேஷ் ‘பார்வதி’ என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா மேனன், ஜெகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா மற்றும் பி.எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘நாகபந்தம்’ திரைப்படத்தின் டீசர் மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு நடிகர் மகேஷ் பாபுவால் வெளியிடப்பட்டது. அந்த டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து, படத்தின் முதல் பாடலான ‘நமோ ரே’ வெளியிடப்பட்டது. சவுந்தர்ராஜன் எழுதிய இந்த பாடலை ஹரிப்ரியா பாடியிருந்தார். பின்னர், இரண்டாவது பாடலான ‘சுர சுர’ வெளியிடப்பட்டது. இந்த பாடலின் வரிகளை மோகன் ரஞ்சன் எழுதியிருந்தார். எஸ்.பி. அபிஷேக், சரத் சந்தோஷ், அனிலா ராஜீவ் மற்றும் பிருந்தா ஆகியோர் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளனர்.

இந்த நிலையில், தற்போது ‘நாகபந்தம்’ திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். மர்மம், சாகசம் மற்றும் திரில்லர் அம்சங்கள் நிறைந்த இந்த டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வருகிற ஜூலை 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading