கேரளத்திலும் வசூலில் அசத்திய பிளாஸ்ட்!

சமீபத்தில் அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிப்பில் ‘பிளாஸ்ட்’ திரைப்படம் வெளியானது. குடும்பக் கதை அம்சத்துடன் கூடிய ஆக்ஷன் படமாக வெளியான இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று கிட்டத்தட்ட 55 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. தமிழகத்தில் மட்டுமல்லாது கேரளாவிலும் பிளாஸ்ட் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. பொதுவாக கேரளாவில் தமிழிலிருந்து வெளியாகும் ஆக்ஷன் படங்கள் ஒரு வாரத்திற்கு பின் வசூலில் தேக்கத்தை சந்திக்கும். ஆனால் பிளாஸ்ட் திரைப்படம் தற்போதும் கேரளாவில் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது.குறிப்பாக கடந்த இரண்டு வாரங்களில் கிட்டத்தட்ட 11.5 கோடி கேரளாவில் வசூலித்துள்ளது. பிளாஸ்ட் இதற்கு முன்னதாக வெளியாகி ஹிட்டான சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம் கேரளாவில் 13 கோடி வசூலித்த நிலையில் கிட்டத்தட்ட அதற்கு இணையாக வசூலில் கெத்து காட்டி வருகிறது பிளாஸ்ட்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading