“சிக்மா ஸ்டைல்” பாடலின் BTS வீடியோவை பகிர்ந்த இயக்குனர் ஜேசன் சஞ்சய்!

இயக்குநர் ஜேசன் சஞ்சய் தான் இயக்கிய‘சிக்மா’ திரைப்படம் குறித்து “இப்படம் எனக்கு மிகவும் சிறப்பான மற்றும் மறக்க முடியாத பயணமாக இருந்தது. எனது கதையில் நம்பிக்கை வைத்து தொடர்ந்து ஆதரவு அளித்த லைகா நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுபாஸ்கரனுக்கு மனமார்ந்த நன்றி. அர்ப்பணிப்புடன் செயல்பட்ட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருடன் பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சி. விரைவில் படம் குறித்தான மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர இருக்கிறோம்” என்று கூறியிருந்தார்.‘சிக்மா’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான சிக்மா ஸ்டைல் பாடல் வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பாடலில் சந்தீப் கிஷன் இயக்குநர் ஜேசன் சஞ்சய் இணைந்து டான்ஸ் ஆடியுள்ளார்.இந்நிலையில், ‘சிக்மா’ படத்தின் “சிக்மா ஸ்டைல்” பாடலின் படப்பிடிப்பு வீடியோவை ஜேசன் சஞ்சய் பகிர்ந்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading