சென்னையை சேர்ந்த இளம் இசையமைப்பாளர் லிடியன் நாதஸ்வரம். தனது 2 வயதில் டிரம்ஸ் வாசிக்க தொடங்கிய இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உலகின் சிறந்த இசை கலைஞர் விருதை வென்று அசத்தினார்.மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடித்த பரோஸ் 3டி திகைப்படத்திற்கு இசையமைத்த லிடியன் நாசஸ்வரம் தற்போது New Beginnings என்ற தனது முதல் சிம்பொனியை உருவாக்கி இருக்கிறார். இதன் மூலம், சுயமாக சிம்பொனி உருவாக்கி பதிவு செய்த இளம் இந்திய மற்றும் ஆசிய இசையமைப்பாளர் என்ற பெருமையை லிடியன் நாதஸ்வரம் பெற்றிருக்கிறார்.இவரது முதல் சிம்பொனி அரங்கேற்ற நிகழ்வு விரைவில் சென்னையில் நடைபெற இருக்கிறது.
Add a Comment
