ஹாலிவுட்டில் மிகப்பிரபலமான நடிகர், இயக்குநர் க்ளின்ட் ஈஸ்ட்வுட். தொலைக்காட்சியில் நடிக்க துவங்கி பின்னர் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து இயக்குநராக தயாரிப்பாளராக, இசையமைப்பாளராக, பாடலாசிரியராக என சினிமாவில் பல துறைகளில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்தார். நடிகராக A Fistful of Dollars, For a Few Dollars More, The Good, the Bad and the Ugly, Paint Your Wagon, The Beguiled உட்பட பல படங்களில் நடித்து வரவேற்பை பெற்றார். மே 31ம் தேதி தனது 96 வயதை நிறைவு செய்தார் க்ளின்ட் ஈஸ்ட்வுட். இவர் சினிமாவிலிருந்து ஓய்வு பெறுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அவரது மகனும் இசையமைப்பாளருமான கைல் ஈஸ்ட்வுட் ஊடகம் ஒன்றிற்கு (பிரான்ஸ் 3) அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.
Add a Comment
