கலை, அறிவியல், இலக்கியம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்குப் பிரிட்டிஷ் மன்னர் குடும்பத்தால் ‘சர்’ பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற விழாவில், மன்னர் சார்லஸ் இந்தப் பட்டத்தை இட்ரிஸ் எல்பாவுக்கு வழங்கி கவுரவித்தார். கலைத்துறைக்கு அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்புக்காகவும் அவரது சமூக நலப் பணிகளுக்காகவும் இந்த உயரிய விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.விருதைப் பெற்றது குறித்து இட்ரிஸ் எல்பா கூறும்போது, “இந்த கவுரவத்தை முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. அரசர் சார்லஸ் கைகளில் இருந்து இந்த விருதைப் பெற்றது என் வாழ்நாளின் மிக நெகிழ்ச்சியான தருணம். எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும், எனது கலைப் பயணத்தை அங்கீகரித்த பிரிட்டிஷ் ராஜ குடும்பத்துக்கும் மனமார்ந்த நன்றி”என்று தெரிவித்துள்ளார்.

