நடிகை த்ரிஷாவுக்கு பரிசு பெட்டகத்தை அனுப்பிய நடிகர் ராம்சரனின் மனைவி உபாசனா!

நடிகர் ராம்சரனின் மனைவி உபாசனா தனது அத்தை சுரேகாவுடன் இணைந்து ‘அத்தமாஸ் கிச்சன்’ என்கிற பெயரில் பாரம்பரிய வீட்டு உணவு பொருட்களை தயாரித்து வருகிறார் முற்றிலும் இயற்கை பொருட்கள் கொண்டு பாரம்பரிய வீட்டு முறையில் இவை தயாரிக்கப்படுகின்றன. இந்த நிலையில் தற்போது இந்த உணவுப் பொருட்கள் சில அடங்கிய பரிசு பெட்டகம் ஒன்று நடிகை திரிஷாவுக்கு உபாசனாவால் பரிசாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இந்த பரிசு பெட்டகத்தில் ஆந்திராவின் புகழ்பெற்ற பாரம்பரிய ஆவக்காய் ஊறுகாய், கோங்குரா ஊறுகாய், சுவையான கறிவேப்பிலை, பொடி பருப்பு பொடி, மேலும் எளிதான இன்ஸ்டன்ட் ரசம், கேசரி, பொங்கல் மற்றும் உப்புமா மிக்ஸ் உள்ளிட்ட பல உணவுப் பொருட்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பரிசை பெற்றுக் கொண்ட திரிஷா, அதன் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, “மிக்க நன்றி உபாசனா.. இந்த அற்புதமான மற்றும் சுவையான உணவுகளை பார்க்கும்போது உண்மையிலேயே கோடைகாலத்தை உணர்கிறேன்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading