முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து நினைவு பரிசு வழங்கிய இயக்குனர் பார்த்திபன்!

தமிழக முதல்-அமைச்சரும், த.வெ.க. தலைவருமான விஜய்யை அவரது அன்றாட அரசியல் மற்றும் நிர்வாகப் பணிகளுக்கு இடையே பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்களும் தொடர்ந்து நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது அவர் விஜய்க்கு சிறப்பான ஓவியம் ஒன்றை பரிசாக வழங்கினார். அந்த ஓவியத்தில் முதல்-அமைச்சர் விஜய், ஒரு பேரரசர் போன்ற கம்பீரமான தோற்றத்தில் அரியணைக்கு அருகில் நிற்பது போல கலைநயத்துடன் வரையப்பட்டிருந்தது.

அதுமட்டுமின்றி, பார்த்திபன் எழுதிய கவிதை வரிகளும் அந்த ஓவியத்தில் இடம்பெற்றிருந்தன. அந்தக் கவிதையில் கூறப்பட்டிருந்ததாவது:-

“சினிமாயணம் to CMஆசனம்! அராஜகமற்ற ஆட்சியைத் தர, அரகஜா திலகமிட்டு விஜய பேரரசராக அரியணையை அலங்கரிக்கும் உலக அரசியல் அதிர் WIN முதல்வருக்கு வாழ்த்துகள்! பிரியருடன், பார்த்தியன் தேதி: என்றும்!”

இவ்வாறு தனது தனித்துவமான கவிதை நடையில் பார்த்திபன், முதல்-அமைச்சர் விஜய்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading