தமிழ் சினிமாவில் சில படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் அவற்றில் சில படங்கள் வியக்க வைத்த படங்களா அமையும். அப்படி ஒரு படமாக 1986ம் ஆண்டு இதே நாளான மே 29 அன்று வெளியான ‘விக்ரம்’ படம் அமைந்தது.கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், ராஜசேகர் இயக்கத்தில், இளையராஜா இசையில், கமல்ஹாசன், சத்யராஜ், அம்பிகா, டிம்பிள் கபாடியா, லிஸி, ஜனகராஜ் மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம். அந்தக் காலத்தில் படம் வந்த போது ஒரு ஆங்கிலப் படத்தைப் பார்ப்பது போன்று இருந்ததாக ரசிகர்கள் பாராட்டினார்கள்.
Add a Comment
