வியூவ்ஸில் மாஸ் காட்டும் ‘பாரடைஸ்’ படத்தின் ‘ஆயா ஷேர்’ பாடல்!

தெலுங்கில் நானி நடிப்பில் கடந்த வருடம் ஹிட்டான ‘தசரா’ படத்தைத் தொடர்ந்து, அடுத்ததாக தற்போது ‘பாரடைஸ்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். ‘தசரா’ படத்திற்குப் பிறகு இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் இவர் மீண்டும் இந்த படத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக கயாடு லோஹர் நடிக்க, அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இப்படத்தில் இருந்து ‘ஆயா ஷேர்’ என்கிற பாடல் வெளியானது. வெளியான சமயத்திலேயே ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், கல்லூரி விழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் ஒரு முக்கியமான பாடலாக மாறியது. இந்த நிலையில் தற்போது 3 மாதங்களில் 150 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளதுடன் 1.6 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது. இவ்வளவு குறுகிய காலத்தில் அதிகமான பார்வைகளைப் பெற்ற பாடல் என்கிற சாதனையையும் இந்த பாடல் செய்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading