நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடிப்பில் 2023ல் வெளிவந்த படம் ‘ஜெயிலர்’. அப்படத்தில் தமன்னா சிறப்புத் தோற்றத்தில் நடனமாடிய ‘காவாலய்யா’ பாடல் வெளிவந்ததுமே ஹிட் ஆனது. பாடலில் ரஜினிகாந்த் சில வினாடிகள் மட்டுமே வந்தாலும் தமன்னாவின் நடனம் பாடலை சூப்பர்ஹிட்டாக்கிவிட்டது. லிரிக் வீடியோவும், வீடியோ பாடலும் குறுகிய காலத்திலேயே 100 மில்லியன் பார்வைகளைக் கடந்தன. தற்போது வீடியோ பாடல் 400 மில்லியன் பார்வைகளை யு டியுப் தளத்தில் கடந்துள்ளது. அதன் லிரிக் வீடியோ 250 மில்லியன் பார்வைகளை நெருங்கியுள்ளது.
Add a Comment
