நடிகர் சூர்யா நடிப்பில் உருவான கருப்பு கடந்த சில நாள்களாக திரையரங்குகளில் வசூல் வேட்டையாடி கொண்டு இருக்கிறது. நடிகர் சூர்யாவின் சினிமா கேரியரில், திரையரங்குகள் மூலம் மட்டும் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலை கடந்த முதல் திரைப்படமாக ‘கருப்பு’ உருவெடுத்துள்ளது. இந்நிலையில், ‘கருப்பு’ திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 150 கோடி வசூலித்ததாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.திரைப்படம் விரைவில் ரூ.300 கோடியைக் கடந்து, சூர்யாவின் திரைப்பயணத்தில் மிகச்சிறந்த வசூல்செய்த திரைப்படமாக இந்தப் படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Add a Comment
