ராம்சரண் நடிப்பில் வருகிற ஜூன் 4-ந்தேதி ‘பெத்தி’ படம் திரைக்கு வருகிறது. படத்தின் புரொமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் பெங்களூரில் நடந்த விழாவில் ரசிகர்கள் முண்டியடித்ததில் ராம்சரணுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் ராம்சரணின் பாதுகாவலரின் நடவடிக்கை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. சர்வதேச தற்காப்பு கலை வீரரான கெவின் குண்டா ‘பெத்தி’ டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ராம்சரணுடன் சென்று கூட்டத்தை ஒழுங்குப்படுத்தியது வைரலானது. பாதுகாப்பு பணிக்காக கெவின் குண்டாவுக்கு ஒரு நாள் சம்பளமாக ரூ.2 லட்சம் ராம்சரணால் வழங்கப்படுவதாக தகவல் வெளியானது. இதை தொடர்ந்து இந்திய திரை உலகில் அதிக சம்பளம் வாங்கும் பாதுகாவலர்களில் முன்னணியில் கெவின் குண்டா இருப்பதாக கூறப்படுகிறது.
Add a Comment
