பல வருடங்களுக்கு பிறகு டிரைக்ஷன்-க்கு திரும்பும் நடிகர் கிச்சா சுதீப்!

கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கிச்சா சுதீப், கடந்த ஆண்டு சத்ய ஜோதி நிறுவனத் தயாரிப்பில் வெளியான ‘மேக்ஸ்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் அவரது ‘பில்லா ரங்கா பாஷா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஜூன் மாதத்தில் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த ஆண்டிற்குள்ளாகவே திரைப்படத்தை வெளியிடுவதற்கான பணிகளையும் படக்குழு தீவிரமாக மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், நடிகர் சுதீப் தற்போது ஒரே நேரத்தில் நான்கு வெவ்வேறு வகையான கதைகளை உருவாக்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் ஒரு திரைப்படத்தை அவரே இயக்கும் வாய்ப்பும் இருப்பதாக கூறப்படுகிறது. இயக்குநராக செயல்படுவது சுதீப்பிற்கு புதிய விஷயம் அல்ல. ஏற்கனவே ஆறு திரைப்படங்களை இயக்கியுள்ள அவர், கடந்த 2014-ஆம் ஆண்டு ‘மாணிக்யா’ திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

இந்த திரைப்படம் தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘மிர்ச்சி’ திரைப்படத்தின் மறுஉருவாக்கமாக உருவாக்கப்பட்டிருந்தது. தற்போது சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சுதீப் இயக்குநராக களமிறங்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல், அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Add a Comment

Leave a Reply