‘காட்டாளன்’ படத்தில் மாஸாக கேமியோ ரோலில் நடித்துள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!

‘மார்கோ’ திரைப்படத்தைத் தொடர்ந்து, ‘காட்டாளன்’ என்ற புதிய திரைப்படத்தை ஷரீப் முகமது தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்கியுள்ளார். இதில் ஆண்டனி வர்கீஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், தெலுங்கு நடிகரான சுனில், கபீர் துகான் சிங், ராப்பர் பேபி ஜீன், ராஜ் திரண்டாசு மற்றும் பாலிவுட் நடிகரான பார்தத் திவாரி உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள் தாய்லாந்தில் படமாக்கப்பட்டுள்ளன. உலகப் புகழ்பெற்ற தாய்லாந்து திரைப்படமான Ong-Bak திரைப்படத்தின் சண்டைப் பயிற்சி இயக்குநரான கேச்சா காம்பக்டீ மற்றும் அவரது குழுவினர் இந்தக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். மேலும், ‘ஓங்-பேக்’ திரைப்படத்தில் நடித்த புகழ்பெற்ற யானையான ‘பொங்’ இந்த திரைப்படத்திலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பான் இந்திய அளவில் வெற்றி பெற்ற காந்தாரா திரைப்படத்திற்கு இசையமைத்து பாராட்டுகளை பெற்ற அஜனீஷ் லோக்நாத், தற்போது ஷரீப் முகமது தயாரிக்கும் இரண்டாவது திரைப்படமான ‘காட்டாளன்’ மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், திரைப்படத்தின் முதல் பாடலின் முன்னோட்டத்தை விஜய் ஆண்டனி சமீபத்தில் வெளியிட்டிருந்தார். தணிக்கை குழு, ஆண்டனி வர்கீஸ் நடித்துள்ள ‘காட்டாளன்’ திரைப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், ‘காட்டாளன்’ திரைப்படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள தகவல் தற்போது ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது. அவர் ‘லியோ காப்ரல்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இந்த திரைப்படம் இன்று உலகம் முழுவதும் 1100 திரைகளில் வெளியாகியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading