புதிய சாதனை படைத்த ‘DC’ படத்தின் ‘ராகா ஆப் ரிவெஞ்ச்’ டிராக்!

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், அனிருத் இசையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாக, வாமிகா கபி நாயகியாக நடிக்கும் படம் ‘டிசி’. இப்படத்தின் ‘ராகா ஆப் ரிவெஞ்ச்’ என்ற டிராக் பத்து நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. வெளியானதிலிருந்தே ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது.தற்போது ‘ஸ்போட்டிபை’ ஆன்லைன் தளத்தில், மே 22 முதல் மே 24 வரையிலான, உலக அளவிலான டாப் 10 பாடல்கள் பட்டியலில் இந்த டிராக் 6வது இடத்தைப் பிடித்துள்ளது. ஒரு மாநில மொழித் திரைப்படத்தின் பாடல் இந்த அளவிற்கு உலக அளவிலான டாப் 10ல் இடம் பிடிப்பது பெரிய சாதனை தான்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading