மே 29ம் தேதி ஓடிடியில் வெளியாகும் ‘லீடர்’ திரைப்படம்!

2022ல் ‛லெஜெண்ட்’ என்ற படத்தில் அறிமுகமானவர் லெஜண்ட் சரவணன். ஜே.டி. ஜெர்ரி அந்த படத்தை இயக்கியிருந்தார்கள். அதன் பிறகு அவரது நடிப்பில் இந்த ஆண்டு ஏப்ரல் மூன்றாம் தேதி திரைக்கு வந்த படம் ‛லீடர்’. துரை செந்தில்குமார் இயக்கிய இப்படத்தில் லெஜெண்ட் சரவணனுடன் ஷ்யாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ்புட் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்தார்கள். கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படத்தில் ஆக்சன் ஹீரோவாக தன்னை வெளிப்படுத்தியிருந்தார் லெஜெண்ட் சரவணன்.இந்த படம் மே ஒன்றாம் தேதி ஓடிடியில் வெளியாகும் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்த நிலையில் தற்போது இப்படம் மே 29ம் தேதி அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக படக்குழு ஒரு போஸ்டர் மூலம் அறிவித்து இருக்கிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading