நடிகர் அர்ஜுன் முதல்-அமைச்சர் விஜய்யை சமீபத்தில் சந்தித்தார். அவரை தொடர்ந்து நடிகை குஷ்பு, இசையமைப்பாளர் தமன் ஆகியோர் முதல்-அமைச்சர் விஜய்யை நேற்று சந்தித்துள்ளனர்.இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்து பேசியுள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தை எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து, ‘வாழ்த்துகள் அண்ணா’ என்று பதிவிட்டுள்ளார். இவர் விஜய்யின் ‘மாஸ்டர்’, ‘லியோ’ படங்களை இயக்கியுள்ளார்.
Add a Comment
