திருமண வதந்திகளுக்கு கங்கனா ரணாவத் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் விளக்கமளித்துள்ளார். அதில் “தான் எப்போது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தாலும், அது ரகசியமாக இருக்காது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதில், நான் ஒவ்வொரு நாளும் நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் படப்பிடிப்பில் இருக்கிறேன். யாரோ ஒருவர் இந்த புகைப்படத்தை படப்பிடிப்பில் மேக்கப்புடன் எடுத்துள்ளனர். இப்போது எனக்கு ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. திருமணமான பெண்ணின் தோற்றத்தில் அப்படி என்ன பெரிய விஷயம் இருக்கிறது? நடிகர்கள் அனைத்து வகையான கதாபாத்திரங்களிலும் நடிக்கிறார்கள், நான் ரகசியமாகத் திருமணம் செய்து கொள்ள மாட்டேன், இது உறுதி” என்று தெரிவித்துள்ளார்.
Add a Comment
