நடிகை வேதிகா வெளியிட்டுள்ள பதிவில், “எனது அம்மாவின் போன் எண் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அந்த எண்ணில் இருந்து பணம், ஓடிபி, தனிப்பட்ட தகவல்கள் அல்லது எந்தவிதமான உதவியும் கேட்டு வரும் அழைப்புகள், கோரிக்கைகளுக்கு யாரும் பதிலளிக்க வேண்டாம். மேலும், அந்த எண்ணில் இருந்து அனுப்பப்படும் எந்த லிங்க்குகளையும் கிளிக் செய்ய வேண்டாம்” என்று எச்சரித்துள்ளார்.மேலும், “இந்த பிரச்சினை சரிசெய்யப்பட்டவுடன் அனைவருக்கும் அப்டேட் தருகிறோம். தயவுசெய்து இந்த தகவலை உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். பாதுகாப்பாக இருங்கள்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நடிகை வேதிகாவின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.
Add a Comment
