‘மை டியர் சிஸ்டர்’ படத்தின் ரிலீஸ் எப்போது? வெளியான புது அப்டேட்!

‘என்னங்க சார் உங்க சட்டம்’ திரைப்படத்தை இயக்கிய பிரபு ஜெயராம் இயக்கத்தில், அருள்நிதி மற்றும் மம்தா மோகன்தாஸ் இணைந்து நடித்துவரும் திரைப்படம் ‘மை டியர் சிஸ்டர்’. இந்த திரைப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் கோல்ட் மைன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இந்த படம், அக்கா – தம்பி உறவை மையமாகக் கொண்டு நகைச்சுவை மற்றும் உணர்ச்சிப்பூர்வமான அம்சங்களுடன் உருவாகியுள்ளது.

ஏற்கனவே இந்த திரைப்படம் 2026 கோடை வெளியீட்டை முன்னிட்டு திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், சில காரணங்களால் படம் இதுவரை வெளியாகாமல் தாமதமாகியுள்ளது. அதேசமயம், புதிய வெளியீட்டு தேதியும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், ‘மை டியர் சிஸ்டர்’ திரைப்படத்தின் டிஜிட்டல் மற்றும் செயற்கைக்கோள் ஒளிபரப்பு உரிமைகளை விஜய் டிவி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனங்கள் இணைந்து ரூ.15 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அருள்நிதி நடித்த திரைப்படங்களில் அதிக தொகைக்கு விற்பனையான படமாக இது அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த திரைப்படம் அடுத்த மாத இறுதியில் அல்லது ஜூலை மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading