முதல்வர் விஜய் இரண்டு தலைமுறைகள் வரை நல்லாட்சி செய்வார்… இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் டாக்!

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், தமிழக முதல்வர் விஜய்யை பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார்.

அப்போது அவர் பேசுகையில், “மக்களிடையே மிகப்பெரிய வெற்றியை பெற்று மீண்டும் சட்டமன்றத்தில் தனது இடத்தை உறுதியாக நிரூபித்துள்ள தமிழக முதல்வர் விஜய்க்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். பல முன்னணி நடிகர்கள் அரசியலில் வெற்றி பெற முயற்சி செய்திருந்தாலும், முதல் முயற்சியிலேயே இந்த அளவிலான சாதனையை நிகழ்த்திய முதல்வராக விஜய் உயர்ந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது,” என்று கூறினார்.

மேலும் அவர் பேசும்போது, “எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஒரே அடியில் மக்களின் முழு ஆதரவை பெற்றவர் விஜய்தான். இதை பலர் ஏற்றுக்கொள்ள சிரமப்படுகிறார்கள். ஆனால் அது உண்மை. நிச்சயமாக இன்னும் இரண்டு தலைமுறைகள் வரை அவர் இந்த ஆட்சியில் நிலைத்திருப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். விஜய்யிடம் இருக்கும் விவேகம் மிகவும் அளவிட முடியாத ஒன்று. அந்த விவேகத்திற்கு தோல்வி என்றே கிடையாது. நம்முடைய குடும்பத்திலிருந்து ஒருவர் உயர்ந்த நிலைக்கு வரும்போது நாம் வாழ்த்துவது போல, அவரையும் வாழ்த்த வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply