நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘ராமாயணா’. இப்படத்தின் முதல் பாகம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 5-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற தசரா விழாவில் முதல்வர் சுவேந்து அதிகாரி, நடிகர்கள் ரன்பீர் கபூர், யஷ் உள்ளிட்டோருடன் கலந்துகொண்டார். அப்போது ‘ராமாயணா’ படத்திற்கு வரி விலக்கு அறிவித்ததுடன், ஸ்ரீகிருஷ்ணா, அர்ஜுனா, மகாபாரதம் போன்ற கதைகளும் எதிர்காலத்தில் மக்கள் பார்க்கும் வகையில் திரைப்படங்களாக உருவாக வேண்டும் என்றும் தெரிவித்தார்.
Add a Comment
