“விஜய் ஆண்டனியின் கேரியரில் முக்கியமான படமாக ‘அப்பா குட்டி’ இருக்கும்” – இயக்குநர் மு. மாறன்!

‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘கண்ணை நம்பாதே’, ‘பிளாக் மெயில்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய மு. மாறன், தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ப்ரீத்தி அஸ்ரானி, சித்ரா லட்சுமணன், பகவதி பெருமாள், ‘அருவி’ மதன், ஜென்சன் திவாகர், லிதன்யா, ஹரிப்பிரியா, முருகானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்தின் கதையைப் பற்றிப் பேசிய இயக்குநர் மு. மாறன், “அப்பாவுக்கும் ஒரு குட்டிப் பெண்ணுக்கும் இடையே இருக்கும் பாசத்தை மையமாகக் கொண்ட உணர்வுபூர்வமான கதை இது. அந்தச் சிறுமி தனது அப்பாவை மிகவும் செல்லமாக ‘அப்பா குட்டி’ என்று அழைப்பாள். அந்த வார்த்தையையே படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறோம்.

விஜய் ஆண்டனி இந்தப் படத்தில் நடிகர், எடிட்டர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் எனப் பல பொறுப்புகளைச் சிறப்பாகக் கையாண்டுள்ளார். படத்திற்குத் தேவையான பட்ஜெட்டையும் ஒதுக்கினார். அவரது திரைப்பயணத்தில் இது மிகவும் முக்கியமான படமாக இருக்கும்.

‘அயோத்தி’ படத்தின் மூலம் கிடைத்ததைப் போன்ற பெரிய வரவேற்பு ப்ரீத்தி அஸ்ரானிக்கும் இந்தப் படத்தில் கிடைக்கும் என்று நம்புகிறேன். அதேபோல், குழந்தை நட்சத்திரம் லிதன்யாவின் நடிப்பும் நிச்சயம் பேசப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading