சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் கதையின் நாயகியாக நடித்து கடந்த பிப்ரவரி 27ம் தேதி திரைக்கு வந்த படம் ‘தாய் கிழவி’. இந்த படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்தது. வயதான பெண்ணின் கெட்டப்பில் ராதிகா நடித்த இந்த படத்தில் அவருடன் சிங்கம்புலி, முனீஸ்காந்த், பால சரவணன், இளவரசு, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்க, நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக ஓடிவந்த நிலையில், 25 நாட்களில் 75 கோடி வசூலித்திருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது 75 நாட்களில் உலக அளவில் 90 கோடி வசூலித்து மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்திருப்பதாக படக்குழு இணையப்பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
Add a Comment
