பிரபல டப்பிங் கலைஞரும், நடிகையுமான ரவீனா ரவி, மலையாள திரைப்பட இயக்குனர் தேவன் ஜெயக்குமாரை திருமணம் செய்துகொண்டுள்ளார். தேவன் ஜெயக்குமார் இயக்கிய மலையாளப் படமான ‘வாலாட்டி’ படத்தில் ரவீனா ரவி டப்பிங் பேசினார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.இதனையடுத்து பெற்றோர்கள் சம்மதத்துடன் 2024ம் ஆண்டு அக்டோபரில் சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் காதலை உறுதிப்படுத்தினர் இருவரும். இந்த நிலையில், இன்று (மே 10) ரவீனா ரவி – தேவன் ஜெயக்குமார் திருமணம் நடைபெற்றுள்ளது.
Add a Comment
