‘ராக்கா’ படத்தில் ராஷ்மிகாவுக்கு வில்லி கதாபாத்திரமா?

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘ராக்கா’. இதில் தீபிகா படுகோனே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் இப்படம், பான்-இந்தியா திரைப்படமாக உருவாகி வருவதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா முக்கிய துணைக் கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தீபிகாவின் கதாபாத்திரத்துக்கு வழிகாட்டியாகவும் பாதுகாப்பு அளிப்பவராகவும் அவர் நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதேசமயம், ராஷ்மிகாவின் கதாபாத்திரத்தில் எதிர்மறையான அம்சங்களும் இடம்பெறலாம் எனத் திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது. இருப்பினும், அவர் வில்லியாக நடிக்கிறாரா என்பது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

‘தம்மா’ படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட இடுப்பு காயத்திலிருந்து குணமடைந்த ராஷ்மிகா, மீண்டும் மும்பையில் நடைபெறும் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Add a Comment

Leave a Reply