விஜய் முழுக்க முழுக்க புதியவர். அவருக்கு இந்த அரசியல் சட்ட திட்டங்கள் நுணுக்கமாக புரிய நாட்களெடுக்கும் பொறுத்திருங்கள். அவர் புரிந்து நன்றாக செயல்பட்டுவிட்டால் நல்லதுதானே. அப்படி இல்லையென்றால் மக்களே புரிந்து மாற்றி விடுவார்கள்தானே.இதை நான் யாருக்கு ஆதரவாகவும் வாசிக்கவில்லை. இல்லை, உடனே விஜய்க்கு ஜால்ரா போடுறேன்னு சொல்லக் கூடாது. விருப்பு வெறுப்புகளை துறந்து பொதுவான ஓர் அமைதியான சமூகம் உருவாக வழி அமைப்போம் என்பதற்காகத்தான் இந்தப் பதிவு. முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் விஜய்க்கு வாழ்த்துகள். நல்ல சமுதாய கட்டமைப்பை உருவாக்க உங்கள் அர்பணிப்பை தாருங்கள் என சேரன் பதிவிட்டுள்ளார்.
Add a Comment
