‘கருப்பு’ திரைப்படத்தின் டிரெய்லர் சரியான நேரத்தில் வெளியாகும் – இயக்குனர் ஆர்‌ஜே‌.பாலாஜி உறுதி!

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘கருப்பு’. பலமுறை இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்ட நிலையில், தற்போது இந்த திரைப்படம் வருகிற மே 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். நடிகை திரிஷா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தில், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், தற்போது படத்தின் டிரெய்லர் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘கருப்பு’ திரைப்படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தனது எக்ஸ் தள பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். அந்த பதிவில் அவர், “டிரெய்லர் தெறிக்கும்… தி ஒன் வந்து கொண்டிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading