சமீபத்தில் திருச்சூரைச் சேர்ந்த சுனிதா என்கிற பெண், பெங்களூருவில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் கைவிடப்பட்ட நாய்களை மீட்டு பராமரிக்கும் ஒரு சமூக ஆர்வலர். பெங்களூருவில் உள்ள ஒரு நாய் காப்பகத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அங்கு பணியாற்றிய இடத்தின் உரிமையாளர் அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த போது, அதை தடுத்து போராடிய நிலையில் சுனிதா கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து பலரும் சுனிதாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டு குரல் எழுப்பி வருகின்றனர். அந்த வகையில் நடிகை பார்வதி திருவோத்து இது குறித்து ஒரு உருக்கமான வீடியோவை கண்ணீருடன் வெளியிட்டுள்ளார்.
Add a Comment
