ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா மற்றும் நடிகை திரிஷா இணைந்து நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் அடுத்த வாரம், அதாவது மே 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இன்னும் படத்தின் டிரைலர் வெளியாகாதது ரசிகர்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது. இதுகுறித்து தற்போது இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி தனது தனித்துவமான பாணியில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கூறியதாவது: “அடுத்த வாரம் இதே நேரத்தில், அதாவது மே 14ஆம் தேதி ‘கருப்பு’ திரைப்படத்தை வெளியிடுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஆனால் இன்னும் டிரைலர் வெளியாகவில்லை. டிரைலர் முழுமையாக தயாராகிவிட்டது. இருப்பினும் தற்போது சில அரசியல் சூழ்நிலைகளும் எதிர்பாராத திருப்பங்களும் நடைபெற்று வருகிறது. அவை அனைத்தும் முடிவுக்கு வந்த பிறகு, நாம் நினைப்பது போல அனைத்தும் நல்லபடியாக நடக்கட்டும் என்று காத்திருக்கிறோம்.
இப்போது டிரைலரை வெளியிட்ட உடனே அரசியல் சம்பவங்கள் அதைப் பின்னுக்குத் தள்ளக்கூடாது என்று நினைக்கிறோம். அதனால் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் சரியான நேரத்தில் டிரைலரை வெளியிட திட்டமிட்டுள்ளோம். கருப்பன் நம்முடன் இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.
