துரந்தர் 2 படத்தில் ‘ஜமீல் ஜமாலி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய ராகேஷ் பேடிக்கு பாராட்டுகள் குவிகிறது. ரன்வீர் சிங், ஒரு மேடையில் இந்த படத்தின் வெற்றிக்கு ராகேஷ் பேடி தான் பெரும் பங்கு என்று கூட குறிப்பிட்டிருந்தார். துரந்தர் படத்தின் 2 பாகங்களுக்கும் சேர்த்து, ராகேஷ் பேடிக்கு சம்பளமாக ரூ.80 லட்சம் வழங்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் படத்தின் வெற்றி மற்றும் ஜமீல் ஜமாலி கதாபாத்திரத்துக்கு குவியும் பாராட்டு, ராகேஷ் பேடிக்கு தக்க சன்மானத்தை கொடுக்க செய்திருக்கிறது. சமீபத்தில் படக்குழு சார்பில் ராகேஷ் பேடிக்கு ரூ.1.4 கோடி வழங்கப்பட்டிருக்கிறது.
Add a Comment
