பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பட்டாஸ்’ பட நடிகை மெஹ்ரீன் திருமணம்!

பஞ்சாபி பெண்ணான மெஹ்ரீன் பிர்சாதா, தமிழில் ‘நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா, பட்டாஸ், இந்திரா’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, பஞ்சாபி மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கும் ஹரியானா முன்னாள் முதல்வர் பஜன்லாலின் பேரனும், பா.ஜ., எம்எல்ஏ.,வாக இருந்தவருமான பவ்யா பிஸ்னாய் என்பவருக்கும் கடந்த 2021ல் ஜெய்ப்பூர் அரண்மனையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பின்னர் கோவிட் உள்ளிட்ட சில பிரச்னைகளால் திருமணம் நின்றது. இந்த நிலையில், நேற்று (ஏப்.,26) நடிகை மெஹ்ரீன், அர்ஷ் அவ்லாக் என்பவரை திடீரென திருமணம் செய்துகொண்டார். இமாச்சல் பிரதேசத்தில் நடந்த இவர்களது திருமணத்தில் இரு வீட்டார் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இந்த நிலையில் திருமண புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் மெஹ்ரீன். இப்புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading